Last Updated:
இன்றைய ஆட்டத்தில் சதம் அடித்திருப்பது அவருக்கு மிகப்பெரும் கம்பேக்கை கொடுத்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்று வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்த ரிஷப் பந்த், அதனை குட்டி காரணம் அடித்து கொண்டாடினார். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கடைசி லீக் போட்டியாக இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டி லக்னோ மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்துள்ள லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 227 ரன்கள் குவித்துள்ளது.
அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் ரிஷப் பந்த் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 61 பந்துகளில் 118 ரன்கள் குவித்தார். இந்த தொடர் முழுவதுமே மிக மோசமான பேட்டிங் பர்பாமன்ஸை ரிஷப் பந்து வெளிப்படுத்திய நிலையில், அவர் மீது ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் இருந்தனர்.
இதற்கிடையே அவர் அடுத்த மாதம் இங்கிலாந்தில் நடைபெற உள்ள டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் துணை கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் சதம் அடித்திருப்பது அவருக்கு மிகப்பெரும் கம்பேக்கை கொடுத்துள்ளது.
சதம் அடித்த பின்னர் ரிஷப் பந்த் மைதானத்தில் குட்டிக்கரணம் அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இதன் மூலம் அவர் நல்ல உடல் தகுதியுடன் இருப்பதாக விமர்சனங்கள் கூறியுள்ளனர். தற்போது சதத்தை கொண்டாடிய பிஷப் சம்பந்தப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
May 27, 2025 10:09 PM IST


