Last Updated:
இறுதியாக ஜூன் 3ஆம் தேதி அகமதாபாத்தில் நடப்பு சீசனின் சாம்பியன் யார் என தீர்மானிக்கும் இறுதிப் போட்டி நடைபெறுகிறது
நடப்பு ஐபிஎல் சீசனின் லீக் சுற்று நிறைவு பெற்ற நிலையில், நாளை முதல் பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றிபெற்றதன் மூலம், புள்ளிப்பட்டியலில் பெங்களூரு அணி 2-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. மேலும், பிளே ஆப் சுற்றுக்கு பஞ்சாப், பெங்களூரு, குஜராத் மற்றும் மும்பை அணிகள் தகுதி பெற்றன. இந்நிலையில், நாளை பஞ்சாப்பில் நடைபெறும் முதலாவது தகுதிச்சுற்று ஆட்டத்தில், முதல் இரண்டு இடங்களில் உள்ள பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
தொடர்ந்து நாளை மறுநாள் இதே பஞ்சாப் மைதானத்தில் நடைபெறும் வெளியேற்றுதல் சுற்றில் மும்பை – குஜராத் அணிகள் மோதுகின்றன.
ஜூன் 1ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் இரண்டாவது தகுதிச்சுற்று ஆட்டத்தில் முதலாவது தகுதிச்சுற்று ஆட்டத்தில் தோல்வி அடையும் அணியும், வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெறும் அணியும் மோதிக் கொள்ளும்.
இறுதியாக ஜூன் 3ஆம் தேதி அகமதாபாத்தில் நடப்பு சீசனின் சாம்பியன் யார் என தீர்மானிக்கும் இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இதில், முதலாவது தகுதிச்சுற்றில் வெற்றிபெறும் அணியும், இரண்டாவது தகுதிச்சுற்றில் வெற்றிபெறும் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன.


