Last Updated:
மழை அல்லது வேறு காரணங்களால் ஒரு பந்து கூட வீசப்படாமல், போட்டி ரத்து செய்யப்பட்டால் மட்டுமே டிக்கெட் தொகை திரும்ப வழங்கப்படும்.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 18வது சீசன் மார்ச் 22 அன்று கொல்கத்தாவில் தொடங்கவுள்ளது. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் நடைபெறும் இந்த தொடக்கப் போட்டியில் நடப்பு சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேபிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கோப்பையை வெல்லப் போட்டியிடுகின்றன. 13 இடங்களில் நடைபெறும் இந்தப் போட்டிகள் மே 25ஆம் தேதி இறுதிப் போட்டியுடன் நிறைவடைகிறது.
இந்த சீசனை முன்னிட்டு ரசிகர்களிடையே எழுந்துள்ள சில முக்கிய கேள்விகளும் அவற்றுக்கான பதில்களும் கொடுக்கப்பட்டுள்ளது:
1. ஐபிஎல் 2025 டிக்கெட்டுகளின் விலை என்ன?
ஐபிஎல் 2025 டிக்கெட்டுகள் ரூ.400 முதல் ரூ.35,000 வரை கிடைக்கும்.
2. ஐபிஎல் 2025 டிக்கெட்டுகளை ஆன்லைனில் எப்படி வாங்குவது?
ஐபிஎல் 2025க்கான டிக்கெட்டுகளை BookMyShow மற்றும் District போன்ற இணையதளங்கள் மூலம் ஆன்லைனில் வாங்கலாம்.
3. டிக்கெட் விலைகளில் ஏன் வித்தியாசம்?
இருக்கை வகை, போட்டியின் முக்கியத்துவம் மற்றும் போட்டி நடைபெறும் மைதானம் ஆகியவற்றைப் பொறுத்து டிக்கெட் விலைகள் மாறுபடுகிறது.
4. ஐபிஎல் 2025 டிக்கெட்டுகளை நேரடியாக எப்படி வாங்குவது?
ஐபிஎல் டிக்கெட்டுகளை ஆன்லைனிலும், போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கவுண்டர்கள் மூலம் டிக்கெட்டுகளை நேரடியாகவும் வாங்கலாம்.
5. போட்டி நிறுத்தப்பட்டால் பணம் திரும்பக் கொடுக்கப்படுமா?
மழை அல்லது வேறு காரணங்களால் ஒரு பந்து கூட வீசப்படாமல், போட்டி ரத்து செய்யப்பட்டால் மட்டுமே டிக்கெட் தொகை திரும்ப வழங்கப்படும்.
இதையும் படிக்க: “இதற்கு நீங்கள் சந்தோஷப்பட கூடாது…” – ரோகித் சர்மாவை சாடிய சுனில் கவாஸ்கர்
6. ஐபிஎல் 2025ல் எத்தனை போட்டிகள் நடைபெறும்?
மார்ச் 22 முதல் மே 25 வரை மொத்தம் 74 போட்டிகள் நடைபெறும்.
7. ஐபிஎல் 2025 போட்டிகள் எந்த நேரத்தில் நடைபெறும்?
பகல் போட்டிகள் பிற்பகல் 3:30 மணிக்கும், இரவு போட்டிகள் மாலை 7:30 மணிக்கும் தொடங்கும்.
March 07, 2025 2:17 PM IST


