Last Updated:
5 முறை மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்ற போதும் பும்ரா அணியில் இடம் பெற்றிருந்தார். அவரை 18 கோடி ரூபாய் கொடுத்து மும்பை அணி நிர்வாகம் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை அணியின் நட்சத்திர பவுலர் பும்ரா விளையாடாத நிலையில், அவர் எப்போது விளையாடுவார் என்பது குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனால் மும்பை அணியின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்கள்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 17 ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. இதன் அடிப்படையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் வெற்றி பெற்று தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
பஞ்சாப், பெங்களூர், குஜராத் அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. கொல்கத்தா ஐந்தாவது இடத்திலும், லக்னோ ஆறாவது இடத்திலும், மும்பை அணி ஏழாவது இடத்திலும் இருக்கிறது. ஹாட்ரிக் தோல்வி அடைந்துள்ள சென்னை அணி எட்டாவது இடத்திற்கு பின் தொடங்கியுள்ளது.
இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அந்த அணிக்கு இன்னும் 10 போட்டிகள் மீதமுள்ள நிலையில், அவற்றில் பெரும்பாலான போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்ய முடியும். காயம் காரணமாக மும்பை அணியின் நட்சத்திர பவுலர் ஜஸ்பிரித் பும்ரா விளையாடாமல் இருந்து வருகிறார்.
முதுகில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மேலும் அதே இடத்தில் காயம் ஏற்பட்டால் அவரால் இனிமேல் பந்து வீச முடியாது என்று கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பும்ரா வரும் 13ம் தேதி டெல்லி அணிக்கு எதிராக நடைபெற உள்ள ஆட்டத்தில் பங்கு பெறுவார் என்று தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன.
5 முறை மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்ற போதும் பும்ரா அணியில் இடம் பெற்றிருந்தார். அவரை 18 கோடி ரூபாய் கொடுத்து மும்பை அணி நிர்வாகம் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
April 05, 2025 9:05 PM IST


