• Login
Saturday, June 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL 2025 : ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் இங்கிலாந்து வீரர்.. 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட வாய்ப்பு

GenevaTimes by GenevaTimes
March 10, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
IPL 2025 : ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் இங்கிலாந்து வீரர்.. 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட வாய்ப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 10, 2025 4:46 PM IST

நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டன் இன்னும் அறிவிக்கப்படாமல் இருப்பது என்பது கவனிக்கத்தக்கது.

ஹேரி புரூக்ஹேரி புரூக்
ஹேரி புரூக்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து இங்கிலாந்து வீரர் ஹேரி புரூக் விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால் அவருக்கு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து விளையாட 2 ஆண்டுகள் தடை விதிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் இளம் ஆல்ரவுண்டராக இருப்பவர் ஹேரி புரூக். 26 வயதாகும் இவர் 20 ஓவர் போட்டிகளில் அபாரமான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறார். சர்வதேச அளவில் பல்வேறு 20 லீக் போட்டிகளில் விளையாடிய அனுபவம் இவருக்கு உண்டு. சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் ஏலத்தில் இவர் அணி உரிமையாளர்களின் கவனத்தைப் பெற்றார்.

ஹேரி புரூக்கை தங்களது அணியில் எடுப்பதற்கு ஐபிஎல் அணி உரிமையாளர்கள் மத்தியில் போட்டி காணப்பட்ட நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இவரை ரூ. 6 கோடியே 25 லட்சம் கொடுத்து விலைக்கு வாங்கியது. இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இம்மாதம் 22 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் தான் நடப்பு ஐபிஎல் தொடரை தவிர்ப்பதாக ஹேரி புரூக் தெரிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு கிரிக்கெட் ரசிகர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்ட பின்னர் ஒரு வீரர் அந்த போட்டியை தவிர்ப்பார் என்றால் அவர் மேலும் 2 ஐபிஎல் சீசன்களில் விளையாட முடியாது என்று பிசிசிஐ தடை விதித்திருக்கிறது. ஹேரி புரூக் விலகுவதாக அறிவித்ததை பிசிசிஐ யிடம் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கடந்த வாரம் தெரிவித்துள்ளது. தற்போது ஹேரி புரூக்கருக்குப் பதிலாக மாற்று வீரரை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தேர்வு செய்ய வேண்டும்.

ஹேரி புரூக் விலக என்ன காரணம்?

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு ஹேரி புரூக் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சர்வதேச போட்டிகளில் இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஹாரி புரூக் விளையாடி வருவதால் அவரது பணிச்சுமையை குறைக்கும் வகையில் ஐபிஎல் போட்டியை தவிர்த்திருக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க – Champions Trophy 2025 | சாம்பியன்ஸ் கோப்பை வென்ற இந்திய அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு? மற்ற அணிகளுக்கு என்ன பரிசு?

சமீபத்தில் ஹேரி புரூக்கின் பாட்டி உயிர் இழந்தார். அதனால் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் ஐபிஎல் போட்டியை தவிர்ப்பதாகவும் கூறப்படுகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் கேப்டன் இன்னும் அறிவிக்கப்படாமல் இருப்பது என்பது கவனிக்கத்தக்கது.

First Published :

March 10, 2025 4:46 PM IST

Read More

Previous Post

சோப்பு விலையை உயர்த்தும் முன்னணி நிறுவனங்கள்!

Next Post

நிலுவை ஊக்கத் தொகை எப்போது? – எதிர்பார்ப்பில் பால் உற்பத்தியாளர்கள் | about outstanding incentive amount for aavin milk producers was explained

Next Post
நிலுவை ஊக்கத் தொகை எப்போது? – எதிர்பார்ப்பில் பால் உற்பத்தியாளர்கள் | about outstanding incentive amount for aavin milk producers was explained

நிலுவை ஊக்கத் தொகை எப்போது? - எதிர்பார்ப்பில் பால் உற்பத்தியாளர்கள் | about outstanding incentive amount for aavin milk producers was explained

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin