Last Updated:
கொல்கத்தா மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் விராட் கோலி இன்னும் 38 ரன்கள் இன்றைய ஆட்டத்தில் எடுத்தால் முக்கிய சாதனையை முறியடிப்பார்.
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று முதல் ஆரம்பமாகிறது. மே மாதம் 25ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கிரிக்கெட் தொடரில் 10 அணிகள் மோதுகின்றன.
இன்று நடைபெறும் தொடக்க விழாவில் இந்தி திரையுலக மற்றும் இந்திய திரையுலக நட்சத்திரங்கள், அரசியல் பிரபலங்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள். முதல் போட்டியாக நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளிலும் கேப்டன்ஷிப் மற்றும் முக்கிய வீரர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கொல்கத்தா அணியின் கேப்டனாக அனுபவ வீரர் அஜிங்க்யா ரஹானே, பெங்களூரு அணியின் கேப்டனாக ராஜா பற்றி தார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 17 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று முடிந்துள்ளன. இவற்றில் பெங்களூரு அணி ஒரு முறையுடன் கோப்பையை வென்றது கிடையாது. இதனால் இந்த தொடரில் இயல்பாகவே அந்த அணிக்கு அழுத்தம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த அணியில் விராட் கோலி, ஜித்தேஷ் சர்மா, ஃபிலிப் சால்ட், டிம் டேவிட், லியாம் லிவிங்ஸ்டோன், புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல், சுயஸ் சர்மா உள்ளிட்ட முக்கிய ஆட்டக்காரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இதே போன்று கொல்கத்தா அணியில் ரஹானே, வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், வருண் சக்கரவர்த்தி, ரோமன் பவல், மொயின் அலி முக்கிய ஆட்டக்காரர்கள் உள்ளதால், இன்றைய ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இன்றைய போட்டியில் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 38 ரன்கள் சேர்த்தால் முக்கியமான சாதனையை ஏற்படுத்துவார்.
அதாவது ஐபிஎல் தொடரில் இதுவரை மூன்று அணிகளுக்கு எதிராக விராட் கோலி ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். இன்றைய போட்டியில் அவர் 38 ரன்கள் எடுத்தால் கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டிகளில் 1000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை ஏற்படுத்துவார். அந்த வகையில் ஒட்டுமொத்தமாக ஐபிஎல் தொடரில் 4 அணிகளுக்கு எதிராக 1000 ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி ஏற்படுத்துவார்.
March 22, 2025 5:55 PM IST