Last Updated:
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் வரும் 22-ம் தேதி அன்று தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகிறது.
10 அணிகள் பங்கேற்கும் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வருகிற 22-ந் தேதி தொடங்கி மே 25-ந் தேதி வரை பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.ஐபிஎல் போட்டிகளை காண ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் கிரிக்கெட் ரசிகர்கள்.தொடர்ந்து இரண்டு மாதங்கள் நடைபெறும் கிரிக்கெட் லீக் என்பதாலும், விறுவிறுப்பாக நடைபெறும் போட்டி என்பதாலும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.
17 சீசன்கள் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் சென்னை, மும்பை அணிகள் தலா ஐந்து முறை கோப்பையை கைப்பற்றி இருக்கின்றன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இதுவரை 3 கோப்பைகளை கைப்பற்றியுள்ளது. ராஜஸ்தான், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் தலா ஒரு முறை கோப்பையை வென்றுள்ளனர். இதுவரையிலும் கோப்பையை வெல்லாத அணிகளாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், டெல்லி, லக்னோ அணிகள் உள்ளன. ஐபிஎல் வரலாற்றில் அதிக ரசிகர்கள் பட்டாளம் உள்ள அணிகளாக சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இருக்கின்றன.
இதுவரையிலும் பெங்களூர் அணி கோப்பையை வெல்லாதது ரசிகர்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது. தற்போது, தொடங்க உள்ள 18 – வது சீசனிலாவது பெங்களூர் அணி கோப்பையை வெல்வார்களா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். கொல்கத்தா ஈடன்கார்டனில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்திக்கிறது.
ஐபிஎல் கிரிக்கெட் குறித்து சென்னை ரசிகர்கள் கூறியதாவது ; ” என் பெயர் தமிழ்குமரன் நான் கடந்த 7 வருடங்களாக கிரிக்கெட் பார்த்து வருகிறேன். எனக்கு கிரிக்கெட் பிடித்ததற்கு காரணம் தோனி தான்.அவருக்காகவே கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்தேன். ஐபிஎல் போட்டி என்றாலே, சென்னை சூப்பர் கிங்ஸ் தான் தல தோனி கையால ஐந்து கோப்பையை இதுவரையும் வென்றுள்ளோம். நடைபாண்டிலும் ஆறாவது கோப்பையை வெல்வோம் என்று நம்புகிறோம். சென்னை அணியை பார்க்கும் பொழுது பேட்டிங் பௌலிங் பில்டிங் என ஆள் பார்மெட்டிலும் வலுவாக இருக்கின்றனர். அஸ்வின் அண்ணா சென்னை அணிக்கு திரும்பியது மேலும் வலு சேர்க்கும். இந்த ஆண்டு சென்னை அணி கோப்பையை வெல்வது உறுதி” என்று தெரிவித்தார்.
பெங்களூர் ரசிகர் தெரிவித்ததாவது; ” நான் தீவிரமான விராட் கோலி ரசிகர். இதுவரையிலும் பெங்களூர் அணி கோப்பையை வெல்லாதது வருத்தமளிக்கிறது. மிகப்பெரிய கிரிக்கெட் ஜாம்பவான்கள் க்ரிஷ் கையில், ஏ பி டிவிலியர்ஸ், விராட் கோலி என பெங்களூர் அணியில் இருந்தும் கோபியை வெல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. நடப்பாண்டு 18 வது சீசன் என்பதால், விராட் கோலி இன் ஜெர்சியும் 18 ஆக, இவையெல்லாம் ஒப்பிட்டு பார்க்கும்பொழுது ஆர் சி பி நிச்சயம் இந்த வருடம் கோப்பையை வெல்லும் என்று தோன்றுகிறது. ‘ஈசலாகப் நந்தே’ என்று தெரிவித்தார்.
மும்பை ரசிகர் கூறியதாவது; ” என் பெயர் நவீன் நான் தீவிரமான மும்பை ரசிகர். ரோகித் சர்மாவின் ரசிகர் என்பதால் மும்பை அணியை எனக்கு மிகவும் பிடிக்கும். நாங்கள் இதுவரை ஐந்து கோப்பையை வென்றுள்ளோம். இந்த வருடமும் நாங்கள் கோப்பையை வெல்வோம் என்று நம்புகிறோம். அதற்கு ஏற்ப டேட்டிங் பௌலிங் என அணியும் பலமாக இருக்கிறது. கேப்டனாக ரோகித் சர்மா இல்லாதது வருத்தம் அளிக்கிறது. மற்றும் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்ஷியும் நன்றாகவே உள்ளது.நமக்கு கோப்பை தான் முக்கியம். இந்தாண்டு கோப்பையை வென்றால் நன்றாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Madurai,Madurai,Tamil Nadu
March 22, 2025 10:40 AM IST

