Last Updated:
ஆர்சிபி ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் லக்னோவை வென்று 2-ஆவது இடத்துக்கு முன்னேறியது. பெங்களூரு கொல்கத்தா, சென்னை அணிகளை வீழ்த்தி முன்னிலையில்.
ஐபிஎல் தொடரில் லக்னோவுக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி அபார வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 2-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
லக்னோவில் நடைபெற்ற இந்தப் போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. இதன்படி, முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியில் மிச்செல் மார்ஷ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்த நிலையில், மார்க்ராமும், நிக்கோலஸ் பூரணும் ஜோடி சேர்ந்து, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில், 28 ரன்களில் மார்க்ரமும், 44 ரன்களில் பூரணும் வெளியேறினர். மேலும், ஆயுஷ் பதோனி, 41 ரன்கள் குவித்தார். இதனால், 20 ஓவர்களில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை சேர்த்தது.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணியில், பிரப்சிம்ரன் சிங் 69 ரன்களைக் குவித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யரும், வதேராவும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால், 16 புள்ளி 2 ஓவர்களிலேயே இலக்கை எட்டிய பஞ்சாப் அணி, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
Also Read | ஒரே ரியாக்ஷனில் இணையத்தில் பிரபலமான சிஎஸ்கே பெண் ரசிகை… யார் இவர் தெரியுமா?
RCB ஆதிக்கம்
இந்தப் போட்டியில் வென்றதன் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி அபார வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 2-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதுவரை தான் பங்கேற்ற 2 போட்டிகளிலும் வெற்றிபெற்ற பஞ்சாப் அணி, புள்ளிப் பட்டியலில் 2-ஆவது இடத்துக்கு முன்னேறியது. அதேநேரம் புள்ளிப் பட்டியலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலிடத்தில் உள்ளது.
எந்த சீசனிலும் இல்லாதவாறு இம்முறை ஒரு ஃபயருடன் சீசனை தொடங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கொல்கத்தா மற்றும் சென்னை அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. கொல்கத்தா அணிக்கு எதிராக 7 விக்கெட் வித்தியாசத்திலும், சென்னைக்கு எதிராக 50 ரன்கள் வித்தியாசத்திலும் வென்றது. அதுவும் எதிரணியின் சொந்த மண்ணில் இந்த வெற்றியை பதிவு செய்தது.
இதன்காரணமாக புள்ளிப் பட்டியலில் +2.266 ரன் ரேட் உடன் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் பெங்களூரு அணி இன்று சொந்த மண்ணில் குஜராத் டைட்டன்ஸ் உடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
April 02, 2025 10:27 AM IST