Last Updated:
ஆட்டத்தின் 2 ஆவது இன்னிங்சின் போது பனிப்பொழிவு ஏற்பட்டால் அது பேட்டிங் செய்யும் அணிக்கே பெரும்பாலும் சாதகமாக அமையும்.
கொரோனா காலத்தில் பாதுகாப்பு காரணமாக தடை விதிக்கப்பட்டிருந்த நடை முறைக்கு பிசிசிஐ நடப்பு ஐபில் தொடரில் அனுமதி அளித்துள்ளது. மேலும் 2 முக்கிய விதிகளில் பிசிசிஐ மாற்றம் செய்துள்ளது. இது பவுலர்களுக்கு சாதகமாக அமையலாம் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இருப்பினும் போட்டியின் சுவாரசியத்தை அதிகரிக்க இந்த விதிகள் சரியானதாக இருக்கும் என்றும் விமர்சகர்கள் கூறியுள்ளார்கள். கொரோனா காலத்தில் பாதுகாப்பு நடவடிக்கையாக பந்தின் மீது பவுலர்கள் எச்சில் தடவுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. எச்சில் மூலமாக கொரோனா வைரஸ் பரவும் என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருந்ததால் இந்த தடை ஏற்படுத்தப்பட்டது.
தற்போது கொரோனா ஏறக்குறைய முற்றிலுமாக ஒழிந்து இயல்பு நிலை திரும்பி பல மாதங்கள் ஆகியுள்ள நிலையில், இந்த கட்டுப்பாடு நீடித்து வந்தது. இதுகுறித்து முன்னணி பவுலர்கள் பலரும் ஆதங்கம் தெரிவித்திருந்தனர்.
சமீபத்தில் பேட்டி அளித்திருந்த முகமது ஷமி, எச்சில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதால் ரிவர்ஸ் ஸ்விங்கில் பந்து வீச முடியவில்லை. எனவே எச்சில் பயன்படுத்துவதன் மீதான தடையை நீக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இவரது கருத்தை மற்ற முன்னணி பவுலர்களும், முன்னாள் வீரர்களும் வலியுறுத்தியிருந்தனர்.
இந்நிலையில் மும்பையில் இன்று ஐபிஎல் அணிகளின் கேப்டன்கள் பங்கேற்ற கூட்டம் பிசிசிஐ நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. இதன் முடிவில் எச்சில் பயன்படுத்துவதன் மீதான தடையை ஐபிஎல் தொடரி பிசிசிஐ நீக்கியுள்ளது.
இதேபோன்று 2 ஆவது இன்னிங்ஸில் பனிப்பொழிவு அதிகம் இருந்தால் 2 பந்துகளை பயன்படுத்திக் கொள்ளவும், தேவைப்பட்டால் 11 ஆவது ஓவருக்கு பின்னர் புதிய பந்துகளை பயன்படுத்திக் கொள்ளவும் பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது.
பிசிசிஐயின் இந்த புதிய அறிவிப்புகள் பவுலர்களுக்கு பாசிடிவாக அமையும் என விமர்சகர்கள் கூறியுள்ளனர். மேலும் இந்த அறிவிப்புகள் கிரிக்கெட் போட்டியை மேலும் சுவாரசியம் நிறைந்ததாக மாற்றும் என்பதால் இதற்கு கிரிக்கெட் உலகில் வரவேற்பு காணப்படுகிறது.
ஆட்டத்தின் 2 ஆவது இன்னிங்சின் போது பனிப்பொழிவு ஏற்பட்டால் அது பேட்டிங் செய்யும் அணிக்கே பெரும்பாலும் சாதகமாக அமையும். ஆனால் பிசிசிஐ அந்த சூழலில் 2 பந்துகளை பயன்படுத்த அனுமதி அளித்திருப்பதால் மேட்ச்சின் ரிசல்ட்டே மாறக்கூடும் என விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
March 20, 2025 6:20 PM IST


