ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற உள்ள இறுதி ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் அதிரடியாக ரன்கள் சேர்க்காவிட்டால், அந்த அணியின் வெற்றி வாய்ப்பு குறையும் என கிரிக்கெட் வல்லுநர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.
கடந்த சில போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் போதுமான அளவு ரன்களை பவர் ப்ளே ஒவர்களில் எடுத்து கொடுத்தனர். லீக் சுற்றில் மிகவும் அதிரடியாக விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இணை பவர் ப்ளே ஓவர்களில் குறைந்தது 70 முதல் 75 ரன்கள் வரை எடுத்திருந்தது.
ஆனால் சமீபமாக நடந்து முடிந்த போட்டிகளில் தொடக்க வீரர்கள் ரன்கள் குவிக்காததால் ஐதராபாத் அணி மிகவும் தடுமாறியே வெற்றிகளை பெற்றது. இந்த நிலையில் இறுதி போட்டியில் ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் அதிரடியாக ரன்களை சேர்ப்பார்களா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஒப்பீட்டு அளவில் இரு அணிகளும் சம பலத்துடன் இருந்தாலும் ஐதராபாத் அணிக்கு வெற்றி வாய்ப்பு ஒரு சில சதவீதம் அதிகம் காணப்படுகிறது.
குறிப்பாக தொடக்க வீரர்கள் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா பவர் பிளே ஓவர்களில் ரன்களை குவித்து விட்டால் அந்த அணியை கட்டுப்படுத்துவது என்பது கொல்கத்தாவுக்கு இயலாத காரியமாக மாறிவிடும். இந்நிலையில் இறுதி போட்டி குறித்து டி20 தொடர்களில் மிகவும் அனுபவம் மிக்க வீரரான சுரேஷ் ரெய்னா அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது-
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற வேண்டும் என்றால் முதலில் அந்த அணியின் தொடக்க வீரர்கள் முன்பு விளையாடிய அதே அதிரடி ரன் குவிப்பை திரும்ப கொண்டு வர வேண்டும். இதை செய்யாவிட்டால் வெற்றி வாய்ப்பு குறைந்து விடும். இருப்பினும் கொல்கத்தா அணியின் சூழல் பந்துவீச்சாளர்கள் வீசக்கூடிய 8 ஓவர்கள் ஐதராபாத் அணிக்கு மிகவும் சவாலானதாக இருக்கும்.
ஐதராபாத் அணியின் கேப்டன் ஏற்கனவே உலக கோப்பையை வென்றுள்ளார். இதனால் மிகவும் அழுத்தம் நிறைந்த இந்த இறுதி போட்டியில் வீரர்களை எப்படி கையாளுவது என்பது அவருக்கு தெரியும். ஒவ்வொரு வீரர்களுக்கும் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை புரிந்து வைத்திருப்பார்கள். என்று தெரிவித்துள்ளார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)