ஐபிஎல் 2024 தொடரின் 10ஆவது போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டி பெங்களுரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த சீசனில் ஆர்சிபி அணி விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியை சந்தித்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் விளையாடிய ஒரு போட்டியில் வெற்றியை பெற்றுள்ளது. இரு அணிகளும் தங்களது கடைசி போட்டியில் வெற்றியை பெற்றிருப்பதால் தன்னம்பிக்கையுடன் இருக்கின்றன.
கோலியின் பேட்டிங் பார்ம், டூ பிளெசிஸ், மேக்ஸ்வெல் அதிரடி, தினேஷ் கார்த்திக் என பேட்டிங்கில் ஆர்சிபி பக்காவான அணியாக உள்ளது. ஆனால் பவுலிங்கை பொறுத்தவரை அனுபவ வீரராக முகமது சிராஜ் மட்டுமே உள்ளார். அல்சாரி ஜோசப், யாஷ் தயாள், மயங்கா டாகர் என இளம் பவுலர்களை தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
ஆர்சிபி போல் கொல்கத்தா அணியிலும் சால்ட், வெங்கடேஷ் ஐயர், ஷ்ரேயாஸ் ஐயர், நிதிஷ் ராணா, ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல் என வலுவான பேட்டிங் வரிசையை கொண்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளராக ஸ்டார்க், ஸ்பின்னர்களாக வருண் சக்கரவர்த்தி, சுனில் நரேன் என பவுலிங்கும் ஸ்ட்ராங்காக உள்ளது. எனவே ஆர்சிபியை ஒப்பிடுகையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சற்று வலுவாகவே இருக்கிறது. இருப்பினும் உள்ளூர் மைதானத்தில், உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் விளையாட இருப்பது ஆர்சிபி அணிக்கு கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரன் வேட்டை நிகழ்த்தப்படும் சின்னசாமி மைதானத்தில் போட்டி நடைபெற உள்ளதால், பார்வையாளர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தும் என்கிற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த இரு அணிகளும் 32 முறை இதுவரை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 18 முறை கொல்கத்தா, 12 முறை ஆர்சிபி வெற்றி பெற்றுள்ளன. கடந்த சீசனில் இரண்டு போட்டிகளிலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி பெற்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…