சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன் ரைசஸ் ஹைதராபாத் அணிகள் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டனர்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கும் இரண்டாவது தகுதி சுற்று போட்டியில் ஹைதராபாத் – ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் தோற்கும் அணி வெளியேறும். அதே நேரம் வெற்றிபெறும் அணி கொல்கத்தாவுடன் நாளை மறுநாள் நடைபெறும் இறுதிச்சுற்றில் பலப்பரீட்சை நடத்தும்.
இன்று நடைபெறும் இரண்டாவது தகுதி சுற்றில், ‘எலிமினேட்டர்’ போட்டியில் பெங்களூருவை வெளியேற்றிய உற்சாகத்தில் ராஜஸ்தான் களமிறங்குகிறது. அதே வேளையில், இறுதி போட்டிக்கு செல்லும் முனைப்பில் ஹைதராபாத் அணி தீவிரம் காட்டும். இதனால் போட்டியின் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
ஐபிஎல் தொடரின் இரண்டாம் தகுதிச்சுற்று மற்றும் இறுதிப்போட்டி நடைபெற இருப்பதால் சென்னை சேப்பாக்க மைதானம் மீண்டும் திருவிழாகோலம் பூண்டுள்ளது. இந்த நிலையில், சன்ரைசஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மற்ற இரு அணிகளுக்கு இடையே போட்டி நடைபெறும் என்பதால் கொல்கத்தா அணி வீரர்கள் ஒரு நாள் முன்னதாகவே பயிற்சியில் இறங்கினர்.
எலிமினேட்டரில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி வீரர்கள் நேற்று மதியம் தான் அகமதாபாத்திலிருந்து சென்னை வந்தனர். இதனால் அவர்கள் அனைவரும் ஓய்வு எடுத்துக்கொண்டனர். வலைப்பயிற்சியில் எதுவும் ஈடுபடாமல் நேரடியாக போட்டியில் களம் காணவுள்ளனர்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)