Last Updated:
மும்பை அணிக்கு தொடக்க வீரர் ரோஹித் சர்மா 16 பந்துகளில் 3 சிக்சருடன் 26 ரன்கள் குவித்து நல்ல ஆரம்பத்தை கொடுத்தார்.
மும்பையில் நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து தொடக்க வீரர்களாக ஹைதராபாத் அணியில் அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் பவர் பிளேயில் குறைந்தது 80 ரன்கள் அதிகமாக அடிக்கும் திறமை வாய்ந்தவர்கள். ஆனால் மும்பை அணியின் துல்லியமான பந்துவீச்சுக்கு முன்னால் இருவரும் ரன்கள் சேர்க்க திணறினர்.
28 பந்துகளை எதிர்கொண்ட அபிஷேக் சர்மா 7 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த இஷான் கிஷன் 2 ரன்னில் வெளியேறினார். ஒருநாள் போட்டிகளைப் போன்று விளையாடிய டிராவிஸ் ஹெட் 29 பந்துகளில் 28 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
நிதீஷ் குமார் ரெட்டி 19 ரன்களும் கிளாசன் 37 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 162 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது.
அந்த அணிக்கு தொடக்க வீரர் ரோஹித் சர்மா 16 பந்துகளில் 3 சிக்சருடன் 26 ரன்கள் குவித்து நல்ல ஆரம்பத்தை கொடுத்தார். மற்றொரு வீரர் ரியான் ரிக்கெல்டன் 23 பந்துகளில் 5 பவுண்டரியுடன் 31 ரன்கள் எடுத்தார். வில் ஜாக்ஸ் 36 ரன்ளும், சூர்யகுமார் யாதவ் 26 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோர் உயர உதவினர்.
இதையும் படிங்க – ஆசியக்கோப்பைக்கு முன் இந்திய அணி வங்கதேச சுற்றுப்பயணம்.. அட்டவணை வெளியீடு..!
கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 9 பந்துகளில் அதிரடியாக 21 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 18.1 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி வெற்றி இலக்கை எட்டியது.
April 17, 2025 11:22 PM IST


