Last Updated:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிக மதிப்புடைய வீரராக ரிஷப் பந்த் உள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிக சம்பளம் பெறும் வீரரை விடவும், மகளிர் பிரிமியர் லீக்கில் அதிக சம்பளம் பெறும் வீராங்கனைக்கு கிடைக்கும் ஊதியம் 9 மடங்கு குறைவானது. இதற்கான காரணம் குறித்தும், ஐபிஎல் மற்றும் மகளிர் பிரிமியர் லீக் ஒப்பீடு தொடர்பாகவும் இந்த பதிவில் பார்க்கலாம்.
இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மிகப் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, இதே போன்ற முறையில் லீக் போட்டிகள் உலகம் முழுவதும் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் பிராண்ட் வேல்யூ பல கோடி ரூபாய் மதிப்பில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
நடப்பு ஐபிஎல் தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றன. அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு இந்த அணிகள் தயாராகி வருகின்றன. இது தொடர்பான மினி ஏலம் அடுத்த மாதம் அபுதாபியில் நடைபெற உள்ளது. இதற்கிடையே ஐபிஎல்லை போன்று மகளிர்க்கும் டபிள்யு பி எல் எனப்படும் மகளிர் பிரிமியர் லீக் போட்டிகள் WPL Womens Premier League நடத்தப்படுகின்றன.
இந்த தொடரில் இந்திய அணியின் பிரபல வீராங்கனை தீப்தி ஷர்மா அதிக மதிப்புள்ள வீராங்கனையாக உள்ளார். அவரை 3 கோடியே 20 லட்சம் ரூபாய் கொடுத்து உத்தரப்பிரதேச அணி வாங்கியுள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் அமேலியா கேர் என்ற வீராங்கனையை மும்பை இந்தியன்ஸ் 3 மூன்று கோடி ரூபாய் கொடுத்து பெற்றுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிக மதிப்புடைய வீரராக ரிஷப் பந்த் உள்ளார். இவரை லக்னோ அணி 27 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. அந்த வகையில் ஐபிஎல் விடவும், மகளிர் பிரிமியர் லீக்கில் அதிக மதிப்புடைய பிளேயருக்கு கிடைக்கும் சம்பளம் 9 மடங்கு குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு பின்வரும் காரணங்களை கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர். முதலில் மகளிர் பிரிமியர் லீக் அணிகளுக்கு அவைகள் வீராங்கனைகளை வாங்குவதற்கான தொகை குறைவாக வழங்கப்பட்டுள்ளது. சந்தையை பொறுத்த அளவில் ஐபிஎல் கடந்த 20 ஆண்டுகளாக மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது.
இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவிலும் ஐபிஎல்–லுக்கு வர்த்தகம் நடக்கிறது. மேலும் மகளிர் பிரிமியர் லீக்கை விடவும் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஒளிபரப்பு மதிப்பு பல கோடி ரூபாய் அதிகமாகும். இத்தகைய காரணங்களால் ஐபிஎல் விடவும் மகளிர் பிரிமியர் லீக்கில் வீராங்கனைகளுக்கு குறைவான ஊதியம் வழங்கப்படுவதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
November 29, 2025 5:02 PM IST


