02
ஒரு மாதத்திற்கு முன்பு அதாவது மார்ச் 2ம் தேதி 10 கிராம் தங்கத்தின் விலை 85,320 ரூபாயாக இருந்தது. ஆனால், தற்போது ஏப்ரல் 2, 2025இல் 10 கிராம் தங்கத்தின் விலை 11,983 ரூபாய் அதிகரித்து, 91,115 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை இனியும் ஏறுமுகத்தில்தான் இருக்குமா என்ற கேள்வி அனைவருடைய மனதிலும் தற்போது எழுந்துள்ளது. அப்படி பார்க்கும்போது 10 கிராம் தங்கத்தின் விலை ஒரு லட்சம் ரூபாயை அடைய வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர். மேலும் 10 கிராம் தங்கம் ஒரு லட்சத்தை விட இன்னும் அதிகமாகலாம் என்பதும் அவர்களுடைய கருத்தாக உள்ளது.


