பொதுவாக, ரயிலில் பயணம் செய்வது அனைவருக்கும் பிடிக்கும். ஏனென்றால், ரயிலில் பயணிக்கும் போது, அழகிய மலைகள், வயல்கள் என அனைத்தையும் நம்மால் ரசிக்க முடியும். நாட்டில், ஒவ்வொரு நாளும், லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். அதனால் தான், ரயில்கள் எப்போதும் கூட்டமாக இருக்கும். இதுபோன்ற சமயங்களில், நீங்கள் டிக்கெட்டை முன்பதிவு செய்து PNR நிலையைச் சரிபார்க்கும்போது, உங்களுக்கு இருக்கை கிடைக்குமா அல்லது பயணம் ரத்து செய்யப்படுமா என்று கவலைப்படத் தொடங்குகிறீர்கள். அந்த நிலையில் தோன்றும் RAC, காத்திருப்புப் பட்டியல் மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட நிலை ஆகியவை நமது பயண அனுபவத்தைத் தீர்மானிக்கின்றன. இவற்றுக்கான அர்த்தம்? இவை உங்கள் பயணத்தை எவ்வாறு மாற்றும் என்பதை தற்போது பார்ப்போம்.


