இந்திய முன்னணி கிரிக்கெட் வீரர்கள் பலர் தங்களது காதலிகளுடன் டேட்டிங் செய்து வருவதாக, தகவல் பரவி வரும் நிலையில், அது குறித்து பார்க்கலாம்.
ஷுப்மன் கில் – சாரா டெண்டுல்கர்
இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஷுப்மன் கிலுக்கும், கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கருக்கும் இடையே காதல் இருப்பதாக, சமூகவலைதளங்கள் செய்திகள் பரவுகின்றன. ஆனால், இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறதுஎன்பது தெரியவில்லை. ஏனெனில், இருவரும் தங்களது காதல் குறித்து இதுவரை வெளிப்படையாக எதையும் கூறவில்லை. ஆனால், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா விளையாடிக் கொண்டிருந்தபோது கூட ஷுப்மன் கில் மைதானத்திற்கு வரவில்லை என்றும், சாராவுடன் ஊர்ச் சுற்ற சென்றுவிட்டார் என்றும் தகவல் பரவியது. இருப்பினும், இருவரும் காதல் குறித்து எதையுமே தெரிவிக்கவில்லை.
பிரித்வி ஷா – நிதி தபாடியா
இந்திய அணியின் வளர்ந்து வரும் இளம் வீரர் பிரித்வி ஷா கடந்த சில நாட்களாக தேசிய அணியில் இடம்பெறவில்லை. இருப்பினும், இவர் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இவர், நடிகையும், மாடலுமான நிதி தபாடியாவை காதலித்து வருவதாக கூறப்படுகிறது.
இஷான் கிஷன் – அதிதி ஹூண்டியா
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷனுக்கும் ஒரு காதலி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவர் பிரபலமான இன்ஸ்டாகிராமர் அதிதி ஹூண்டியாவை காதலித்து வருவதாக, பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.
ரிஷப் பந்த் – ஈஷா நேகி
விபத்தில் சிக்கி, பெரும் காயங்களில் இருந்து மீண்டும், நடப்பு உலகக் கோப்பை தொடரில் கலக்கி வரும் ரிஷப் பந்த், ஈஷா நேகி என்பவருடன் டேட்டிங் செய்து வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது. இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளன. இதனிடையே, பாலிவுட் கிளாமர் நடிகை ஊர்வசி ரவுடேலாவையும் ரிஷப் பந்த் காதலித்து வருவதாக, தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், ரிஷப் பந்த் யாரை காதலிக்கிறார் என்று தெரியவில்லை.
இதையும் படிங்க:
“3 முறை செத்து பிழைத்துவிட்டேன்” லலிதாவின் பாட்டுக்கு பாட்டு அப்துல் ஹமீது குமுறல்!
யஷஸ்வி ஜெய்ஸ்வால் – மேடி ஹாமில்டன்
இந்திய அணியின் வளர்ந்து வரும் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மேடி ஹாமில்டன் என்பவரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், இது எந்த அளவுக்கு உண்மை என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.
.
&w=750&resize=750,375&ssl=1)
