சச்சின் டென்டுல்கர் பாராட்டு
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினரின் சிறப்பான ஆட்டத்தை, இந்தியா அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரரான சச்சின் டென்டுல்கர் பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “முதல் நாளில் நம் பெண்கள் அணியினர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஷெபாலி வர்மா இரட்டை சதம், ஸ்மிருத்தி மந்தான 149 ரன்கள் இந்தியாவின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது. அணியின் ஒட்டுமொத்த பேட்டிங் அருமையாக இருந்தது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

