Last Updated:
இந்தியாவின் அசுர வளர்ச்சிக்கு நாட்டின் கலாச்சாரச் சின்னங்கள், இயற்கை வளங்கள், குறைந்த செலவிலான சுற்றுலா வசதிகள் ஆகியவை முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன
சுற்றுலாத் துறை வருவாயில் இந்தியா ஜப்பானை பின்னுக்கு தள்ளியுள்ளது. இந்தியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கும் நிலையில், வருவான் இன்னும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலக அளவில் சுற்றுலாத் துறை மூலம் அதிக வருமானம் ஈட்டும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் நீடிக்கிறது. 2024 ஆம் ஆண்டின் கணக்கீட்டின்படி, அமெரிக்கா சுமார் ரூ. 196 லட்சம் கோடி வருவாய் ஈட்டி உலக நாடுகளை வியக்க வைத்துள்ளது.
சீனா ரூ. 108 லட்சம் கோடி வருவாயுடன் இரண்டாம் இடத்திலும், ஜெர்மனி ரூ. 40 லட்சம் கோடி வருவாயுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன. இந்த வரிசையில் இந்தியா மிகச் சிறப்பான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.
கடந்த காலங்களில் 10-வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது ஜப்பான் மற்றும் பிரான்ஸ் போன்ற வளர்ந்த நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி, சுமார் ரூ. 19.22 லட்சம் கோடி வருவாயுடன் உலக அளவில் 8-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது.
இந்தியாவின் இந்த அசுர வளர்ச்சிக்கு நாட்டின் கலாச்சாரச் சின்னங்கள், இயற்கை வளங்கள் மற்றும் குறைந்த செலவிலான சுற்றுலா வசதிகள் ஆகியவை முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன. குறிப்பாக, உலகப் பொருளாதார மன்றத்தின் பயண மற்றும் சுற்றுலா மேம்பாட்டுக் குறியீட்டில் இந்தியா 39-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
போக்குவரத்து உள்கட்டமைப்பு வசதிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமும் வெளிநாட்டுப் பயணிகளை அதிகளவில் ஈர்க்க உதவியுள்ளது. வரும் 2034 ஆம் ஆண்டிற்குள், இந்தியா உலகின் 4-வது பெரிய சுற்றுலாப் பொருளாதாரமாக உருவெடுக்கும் என்றும், இது இந்தியப் பொருளாதாரத்திற்குப் பெரும் பலத்தைச் சேர்க்கும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


