இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் ஓய்வுபெற்றதை அடுத்து, புதிய தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் தேர்வு செய்யப்பட்டார். அது குறித்து பேசிய தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர், விண்ணப்பதாரர்களில் மிகவும் தகுதிவாய்ந்த ஒருவர் என்று தெரிவித்தார்.
மேலும், டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் குறித்து பேசிய அஜித் அகர்கர், உலகின் மிகச் சிறந்த டி20 பேட்டர்களில் ஒருவர் என்றும், நல்ல கேப்டனாக இருப்பதற்கு தேவையான அனைத்து குணங்களும் அவரிடம் இருப்பதாகவும் தெரிவித்தார். அனைத்துப் போட்டிகளிலும் விளையாடக் கூடிய ஒருவரை கேப்டனாக நியமிக்க முடிவு செய்ததாகவும், அதன் அடிப்படையிலேயே சூர்யகுமார் யாதவ் தேர்வு செய்யப்பட்டதாகவும் விளக்கம் அளித்தார்.
”அணியை வழிநடத்த தேவையான திறமை சூர்யகுமாரிடம் இருக்கிறது. அவர் இதிலும் திறமையை வெளிப்படுத்துவார் என்று நம்புகிறோம். இன்னும் இரண்டு ஆண்டுகள் அவர் எப்படி செயல்படுகிறார் என்பதை பார்க்க உள்ளோம். ஹர்திக் பாண்டியாவை பொறுத்தவரை, அவர் இந்திய அணிக்கு விலை மதிப்புமிக்க வீரர். ஆனால், உடல் தகுதி அடிப்படையில் சூர்யகுமார் யாதவை தேர்வு செய்தோம். எனவே, ஹர்திக் பாண்டியாவிடம் பேசிவிட்டுதான் ஒரு முடிவு எடுத்தோம்” என்றும் அஜித் அகர்கர் தெரிவித்தார்.
இதையும் படிங்க:
மூன்று ஹீரோக்களுடன் டேட்டிங் – இப்போ ஹர்திக் பாண்டியா உடன் நெருக்கம் காட்டும் நடிகை!
அத்துடன், டி20 போட்டிகளுக்கு மட்டுமே சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்படுவார் என்றும், மற்ற போட்டிகளுக்கு கேப்டன் குறித்து பரிசீலிக்கப்படவில்லை என்றும் அஜித் அகர்கர் கூறினார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)