Last Updated:
ஆல்ரவுண்டர் அக்சர் படேலுக்கு பதிலாக நிதீஷ் குமார் ரெட்டி விளையாடும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடும் உத்தேச இந்திய அணி குறித்த விவரங்களை பார்க்கலாம்.
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.
இதனால் தொடரை சமன் செய்யும் முனைப்புடன் இந்திய அணி கட்டாய வெற்றி பெற வேண்டும் என்கிற சூழலில் நாளை இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டி நாளை காலை 9 மணிக்கு கவுகாத்தி மைதானத்தில் தொடங்க உள்ளது.
இந்திய அணியின் கேப்டன் சுப்மான் கில் காயம் அடைந்திருப்பதால் அவருக்கு பதிலாக அணியை ரிஷப் பந்த் வழி நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சாய் சுதர்சன் மூன்றாவது இடத்தில் களமிறங்குவார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.
யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், வாஷிங்டன் சுந்தர், சாய் சுதர்சன், துருவ் ஜுரல், ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, நிதீஷ் குமார் ரெட்டி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்
November 21, 2025 10:05 PM IST


