Last Updated:
கடந்த ஓராண்டில் இந்தியா ஏற்படுத்திய சாதனைகளை நிறைவு கூறும் வரையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடியின் உரை அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் 79வது சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்ட் 15 வெள்ளிக்கிழமை அன்று நாடு முழுவதும் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதனை முன்னிட்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி வியாழன் மாலையில் நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்ற உள்ளார்.
அவரது உரையை நேரலையில் காண்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுதந்திர தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆற்றும் நான்காவது உரை இதுவாகும். இந்த உரை முதலில் இந்தியில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்றும், அதைத் தொடர்ந்து ஆங்கில பதிப்பும் ஒளிபரப்பப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிராந்திய மொழிகளில் கேட்க விரும்புவோருக்கு தூர்தர்ஷனின் பிராந்திய சேனல்கள் மற்றும் ஆகாஷ் வாணியின் பிராந்திய நெட்வொர்க்கில் இரவு 9:30 மணிக்கு தொடங்கி பல்வேறு வட்டார மொழிகளில் குடியரசுத் தலைவரின் உரை ஒலிபரப்பு செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டைப் போலவே குடியரசுத் தலைவரின் நாட்டு மக்களுக்கான சுதந்திர தின உரை தூர்தர்ஷன் சேனல்களில் இரவு 7 மணி முதல் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் ஒளிபரப்பு செய்யப்படும். பிராந்திய தூர்தர்ஷன் சேனல்களிலும் இந்த உரை ஒலிபரப்பாகிறது. மேலும் டிஜிட்டல் தளங்களில் தூர்தர்ஷன் YouTube சேனலிலும் குடியரசுத் தலைவரின் உரை நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
கடந்த ஓராண்டில் இந்தியா ஏற்படுத்திய சாதனைகளை நிறைவு கூறும் வரையில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடியின் உரை அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் எதிர்காலத்தில் இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில் குறிப்பிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
August 13, 2025 10:03 PM IST


