• Login
Tuesday, October 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IND vs WI 1st T20 : ஸ்ரேயாஸ் ஐயர் சதம்! வெஸ்ட் இண்டீஸை 8 விக். வித்தியாசத்தில் வென்றது இந்தியா!c | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
October 6, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
IND vs WI 1st T20 : ஸ்ரேயாஸ் ஐயர் சதம்! வெஸ்ட் இண்டீஸை 8 விக். வித்தியாசத்தில் வென்றது இந்தியா!c | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 06, 2026 10:27 PM IST

இஷான் கிஷன் 25 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மற்றொரு முனையில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் வெளுத்து வாங்கினார்.

ஷ்ரேயாஸ் ஐயர் - இஷான் கிஷன்
ஷ்ரேயாஸ் ஐயர் – இஷான் கிஷன்

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டியில், இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

லக்னோவில் உள்ள பாரத் ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற  இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆரம்பம் முதலே இந்திய பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் திணறினர்.

கேப்டன் ஷாய் ஹோப் 52 ரன்களும், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 56 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை ஓரளவு உயர்த்தினர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இறுதியில் 19.1 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 171 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்திய அணி தரப்பில் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட நமன் திர் 4 ஓவர்களில் 31 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் மற்றும் மயங்க் யாதவ் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் சர்மா 21 ரன்களிலும் (10 பந்துகள்), சஞ்சு சாம்சன் 11 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். 3.3 ஓவர்களில் 35 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது.

ஆனால், அதன் பின்னர் ஜோடி சேர்ந்த இஷான் கிஷன் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டம் போட்டியின் போக்கையே முற்றிலுமாக மாற்றியது. வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த இந்த ஜோடி, 137 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றது.

இஷான் கிஷன் 25 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த, மற்றொரு முனையில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் வெளுத்து வாங்கினார். அவர் வெறும் 43 பந்துகளில் 102 ரன்கள் குவித்து அபார சதமடித்தார். இதில் 10 பவுண்டரிகளும், 6 சிக்ஸர்களும் அடங்கும். இவர்களின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 14.4 ஓவர்களிலேயே 2 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்து, 32 பந்துகள் மீதமிருந்த நிலையிலேயே மிக எளிதாக இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அகீல் ஹொசைன் மற்றும் ரோஸ்டன் சேஸ் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இந்த சிறப்பான வெற்றியின் மூலம் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

Read More

Previous Post

நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த புதிய திட்டம்: ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணையத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

காவி உடையின் கண்ணியத்தையும் மத மரபுகளையும் அரசாங்கம் மதிக்க வேண்டும்: சஜித் வலியுறுத்தல் – Sri Lanka Tamil News

Next Post
காவி உடையின் கண்ணியத்தையும் மத மரபுகளையும் அரசாங்கம் மதிக்க வேண்டும்: சஜித் வலியுறுத்தல் – Sri Lanka Tamil News

காவி உடையின் கண்ணியத்தையும் மத மரபுகளையும் அரசாங்கம் மதிக்க வேண்டும்: சஜித் வலியுறுத்தல் - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin