Last Updated:
IND vs WI | ரவீந்திர ஜடேஜா மேன் ஆஃப் தி சீரிஸ் வென்றார். India, West Indies-க்கு எதிராக 10 தொடர் வெற்றி சாதனை, South Africa சாதனையை சமன் செய்தது.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியது.
இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி டெல்லி அருண்ஜெட்லி விளையாட்டரங்கில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இந்தியா 518 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்த நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணி 248 ரன்கள் மட்டுமே எடுத்து ஃபாலோ-ஆன் ஆனது.
மீண்டும் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி, இரண்டாவது இன்னிங்சில் 390 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி 120 ரன்கள் முன்னிலை பெற்றது. 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி கடைசி நாளானன்று 3 விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
ஏற்கனவே முதல் போட்டியிலும் வெற்றி பெற்றிருந்த இந்திய அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதன்மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்திய அணி 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணி அணிக்கு எதிராக 2002 முதல் 2025 வரை தொடர்ந்து 10 தொடர்களை வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது.
இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய ரவீந்திர ஜடேஜாவுக்கு மேன் ஆஃப் தி சீரிஸ் விருது வழங்கப்பட்டது. விருதை வென்றபின் பேசிய ஜடேஜா, “ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வுக்கு பின் எனக்கு பந்துவீச அதிக வாய்ப்பு கிடைக்கிறது. இந்திய அணியின் வெற்றிக்காக பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் முக்கிய பங்காற்றி உள்ளேன். கிரிக்கெட் விளையாட்டுக்கு எனது 100 சதவீத பெர்பாமென்ஸை கொடுக்க நினைப்பேன். இது எனது மூன்றாவது மேன் ஆஃப் தி சீரிஸ் விருது” என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்காவின் உலக சாதனையை இந்தியா சமன் செய்தது. அதாவது ஒரு எதிரணிக்கு எதிராக தொடர்ச்சியாக அதிக டெஸ்ட் தொடர் வெற்றிகளைப் பெற்ற அணி என்ற சாதனையை தென்னாப்பிரிக்கா வசம் இருந்தது. தற்போது அந்த சாதனையை இந்திய அணி சமன் செய்திருக்கிறது.
1998-2024 காலகட்டத்தில் இதே மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர்களை தொடர்ச்சியாக வென்றுள்ளது. ஆனால், இந்தியா 2000 – 2025 வரை மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக டெஸ்ட் சீரிஸ்களை தொடர்ச்சியாக வென்றுள்ளது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
October 14, 2025 2:07 PM IST