Last Updated:
விசாகப்பட்டினத்தில் தென்னாப்பிரிக்கா 270 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது; Kuldeep, Prasidh Krishna தலா 4 விக்கெட் வீழ்த்தினர். இந்தியா 271 ரன்கள் இலக்குடன் விளையாடுகிறது.
இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி 270 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது. இந்திய தரப்பில் குல்தீப் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா 4 விக்கெட்களை வீழ்த்தினர்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி மூன்று ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ள நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. தொடர்ச்சியாக 20 டாஸ் தோல்விகளுக்குப் பிறகு இன்று டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, தென்னாப்பிரிக்க அணி தரப்பில் தொடக்க வீரராக களமிறங்கிய ரிக்கெல்டன் டக் அவுட் ஆகி ஏமாற்றமளித்தார். மற்றொரு தொடக்க வீரரான டி காக் கேப்டன் பவுமாவுடன் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பவுமா நிதானமாக விளையாடி 67 பந்துகளில் 48 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். மேத்யூ பிரிட்ஸ்கே 24 ரன்களில் பெவிலியன் திரும்பினார். டி காக் சிறப்பாக விளையாடி சதம் விளாசிய நிலையில் 106 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
தென்னாப்பிரிக்கா அணி ஒரு பக்கம் அதிரடியாக விளையாடி வந்த போதும் மறுபக்கம் இந்திய பவுலர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்களை வீழ்த்தி வந்தனர். இறுதியாக 47.5 ஓவர்களில் 270 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய தரப்பில் குல்தீப் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா 4 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதையடுத்து 271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது. சேஸிங் செய்து இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை வெல்லும் என்பது குறிப்பிடதக்கது.
December 06, 2025 5:19 PM IST
Ind vs SA | பிரசித் கிருஷ்ணா, குல்தீப் அபார பந்துவீச்சு… இந்திய அணிக்கு 271 ரன்கள் இலக்கு நிர்ணயத்த தென்னாப்பிரிக்கா


