Last Updated:
India vs SouthAfrica | இந்திய அணியின் கேப்டன் சுப்மான் கில் காயம் அடைந்திருப்பதால் அவருக்கு பதிலாக அணியை ரிஷப் பந்த் வழி நடத்த உள்ளார்.
இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் இன்று தொடங்கிய நிலையில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. இதனால் தொடரை சமன் செய்யும் முனைப்புடன் இந்திய அணி கட்டாய வெற்றி பெற வேண்டும் என்கிற சூழலில் இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.
இந்திய அணியின் கேப்டன் சுப்மான் கில் காயம் அடைந்திருப்பதால் அவருக்கு பதிலாக அணியை ரிஷப் பந்த் வழி நடத்த உள்ளார். டாஸில் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் கேப்டன் சுப்மன் கில் காயம் காரணமாக விலகியுள்ளார். மேலும் அக்ஷர் படேலுக்கு பதிலாக மாற்று வீரர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதன்படி சாய்சுதர்சன் மற்றும் நிதிஷ் ராணா அணியில் இடம்பெற்றுள்ளனர். தென்னாப்பிரிக்கா அணியை பொறுத்தவரை சேனுரன் முத்துசாமி அணியில் இடம்பிடித்துள்ளார்.
வழக்கமாக டெஸ்ட் போட்டிகள் காலை 10 மணிக்கு தொடங்கும் நிலையில், கவுகாத்தியில் பகல் நேரம் குறைவாக இருக்கும் என்பதால் இப்போட்டி காலை 9 மணிக்கு தொடங்க உள்ளது. இப்போட்டியில், தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி அல்லது டிரா செய்தால் கூட 25 ஆண்டுகளில் இந்தியாவில் முதல் டெஸ்ட் தொடரை வெல்வதை உறுதி செய்யும் என்பது குறிப்பிடதக்கது.
November 22, 2025 8:44 AM IST


