இதன் வெற்றி மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-க்கு 1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றது. இந்த போட்டியில், தென் ஆப்பிரிக்க வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (Tristan Stubbs) விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் ஆயிரம் ரன்கள், 100 சிக்சர்கள், 100 விக்கெட்டுகளை வீழ்த்திய 4வது வீரர் என்ற சாதனையை ஹர்திக் பாண்ட்யா படைத்தார். குறிப்பாக, ஆயிரம் ரன்களையும், 100 விக்கெட்டுகளையும் எடுத்த முதல் வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் வசப்படுத்தியுள்ளார். டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய 3வது இந்திய வீரர் என்ற சிறப்புக்கும் ஹர்திக் சொந்தக்காரர் ஆனார்.


