Last Updated:
20 ஓவர் உலக கோப்பை சூப்பர் 8 சுற்றில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
20 ஓவர் உலக கோப்பை சூப்பர் 8 சுற்றில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் ஆட்டங்கள் முடிவடைந்து சூப்பர் 8 சுற்று நடைபெற்று வருகிறது, இதில், அகமதாபாத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் போட்டியில் இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
தொடக்கம் முதல் தோல்வியே சந்திக்காமல் வீறுநடை போட்டு வரும் சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு கட்டுகோப்பான நிலையில் உள்ளது. அதேநேரம் கடந்த 2024 டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் சாம்பியன் பட்டத்தை கோட்டைவிட்டதற்கு தென் ஆப்பிரிக்கா பழிதீர்க்க முயற்சிக்கும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
முன்னதாக பல்லகலேவில் மாலை 3 மணிக்கு நடைபெறும் மற்றொரு சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து- இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துக்கின்றன.
கொழும்புவில் நேற்று பாகிஸ்தான் – நியூஸிலாந்து இடையிலான முதலாவது ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. அதேபோல், பல்லகலேவில் இன்றைய இலங்கை – இங்கிலாந்து ஆட்டத்திலும் மழையின் குறுக்கீடு இருக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது.


