இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் முதல் போட்டியில் தென்ஆப்பிரிக்கா வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது போட்டி, குவஹாத்தியில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் தென்ஆப்பிரிக்க அணி, 489 ரன்கள் குவித்த நிலையில், இந்திய அணி 201 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.


