Last Updated:
ஸ்ரேயாஸ் ஐயர் காயம் அடைந்து இருப்பதால், அவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் காயம் காரணமாக விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக விளையாடும் வீரர் குறித்த தகவல்களும் வெளிவந்துள்ளன.
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில், தொடரை சமன் செய்யும் முனைப்பில் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளது.
இந்தப் போட்டி நாளை மறுதினம் கவுகாத்தியில் தொடங்குகிறது. அதிர்ச்சி தரும் தகவலாக, முதல் போட்டியில் காயம் அடைந்த சுப்மன் கில் இரண்டாவது போட்டியில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி கட்டாய வெற்றி பெற வேண்டியுள்ள சூழலில் சுப்மன் கில் விளையாடாதது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனென்றால், கடந்த போட்டியில் கில் ஓரளவு விளையாடி இருந்தால் மேட்ச் ரிசல்ட் மாறி இருக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர். சுப்மன் கில் விளையாடாத சூழலில் யாரை களம் இறக்குவது என்கிற ஆலோசனையில் இந்திய அணி நிர்வாகம் ஈடுபட்டு வந்தது.
இந்த நிலையில், இளம் வீரர் சாய் சுதர்சன் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 24 வயதாகும் சாய் சுதர்சன் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 273 ரன்கள் எடுத்திருக்கிறார்.
இதற்கிடையே, காயத்திலிருந்து மீள வேண்டும் என்றால் அவர் குறைந்தது 10 நாட்களுக்கு ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரம், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் 30-ம் தேதி ராஞ்சியில் தொடங்க உள்ளது.
November 20, 2025 4:15 PM IST


