Last Updated:
முதல் டெஸ்டில் காயம் அடைந்த கேப்டன் சுப்மன் கில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் 2 ஆவது டெஸ்டில் சேர்க்கப்படவில்லை.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக கேப்டன் சுப்மன் கில் நீக்கப்பட்டுள்ள நிலையில் புதிய கேப்டனை அறிவித்துள்ளது பிசிசிஐ.
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகளைக் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது.
இவற்றில் தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதையடுத்து 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது.
2ஆவது டெஸ்டில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணியால் தொடரை சமன் செய்ய முடியும் என்பதால், அதற்காக இந்திய வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் வரும் 30 ஆம் தேதி தொடங்கவுள்ள ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் டெஸ்டில் காயம் அடைந்த கேப்டன் சுப்மன் கில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் 2 ஆவது டெஸ்டில் சேர்க்கப்படவில்லை.
மேலும் இன்று அறிவிக்கப்பட்ட ஒருநாள் போட்டித் தொடருக்கான அணியிலும் சுப்மன் கில் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக கே.எல். ராகுல் கேப்டன பொறுப்பை ஏற்கிறார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணி- ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர்., ரவிந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், நிதிஷ் குமார் ரெட்டி, ருதுராஜ் கெய்க்வாட், பிரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், துருவ் ஜுரெல் .
November 23, 2025 5:54 PM IST


