Last Updated:
இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சிராஜ், பும்ரா, ரவிந்திர ஜடேஜா தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 6 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் சேர்த்துள்ளது.
2ஆவது டெஸ்ட் போட்டியில் கட்டாய வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கில் இந்திய அணி வீரர்கள் விளையாடி வருகின்றனர். தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடந்தது. இதில் தென்னாப்பிரிக்கா 30 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து அசாம் மாநிலம் கவுகாத்தியில் 2 ஆவது டெஸ்ட் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் டெம்பா பவுமா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதைத் தொடர்ந்து களம் இறங்கிய தொடக்க வீரர்கள் எய்டன் மார்க்ரம் 38 ரன்களும், ரிக்கெல்டன் 35 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.
இளம் வீரர் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 49 ரன்கள் சேர்த்தார். கேப்டன் டெம்பா பவுமா 41 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்தவர்களில் டோனி ஜோர்சி 28 ரன்களும், வியான் மூல்டர் 13 ரன்களும் எடுத்தனர்.
இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 6 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
சிராஜ், பும்ரா, ரவிந்திர ஜடேஜா தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். தற்போது தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் செனுரன் முத்துசாமி 25 ரன்களும், விக்கெட் கீப்பர் கைல் வெரைன் 1 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.
November 22, 2025 4:40 PM IST


