இந்தியா- பாகிஸ்தான் மோதல் என்றாலே தொற்றிக்கொள்ளும் பரபரப்பு இந்த ஆசிய கோப்பையில் சற்றே கூடுதலாக இருந்தது. அது நேற்று நடந்த இறுதிப்போட்டியில் இன்னும் அதிகமானது. வழக்கம் போல், டாஸ் போடும் போது, இரு அணி கேப்டன்களும் கை குலுக்கிக் கொள்ளவில்லை. போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி, 9-வது முறையாக ஆசிய கோப்பை சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்ற திலக் வர்மா, 4 சிக்ஸர்களுடன் 69 ரன்களை விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.


