Last Updated:
IND vs PAK | இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் அபிஷேக் சர்மா டக் அவுட்டானார். அன்றைய ஆட்டத்தில் அவருக்கு அதிக காய்ச்சல் இருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவர் காய்ச்சல் மற்றும் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால், அவர் நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கவில்லை.
இந்திய அணியின் தொடக்க வரிசையில் பலம் காட்டி வந்த அதிரடி ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா இல்லாதது அணிக்கு பலவீனமாகவே கருதப்படுகிறது. அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் களமிறங்கி விளையாடி வந்தார். இந்நிலையில், இந்தியா- பாகிஸ்தான் இடையேயான லீக் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள நிலையில், அபிஷேக் சர்மா சமீபத்தில் பயிற்சியில் ஈடுபட்டதாக இந்திய வீரர் வருண் சக்கரவர்த்தி தெரிவித்திருந்தார்.
ஆனால், அவர் தொடர்ந்து ஓய்வில் இருப்பதாகவும், அடுத்த 2 போட்டிகளில் விளையாடுவது சந்தேகமே என்றும் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறினார். எனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அபிஷேக் ஷர்மா களமிறங்குவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
Chennai [Madras],Chennai,Tamil Nadu


