அதோடு, கையை விமானம் பறப்பது போல் காட்டியும் உடனே அதனை சுட்டு வீழ்த்தியது போலவும் சைகை செய்து இந்தியாவை கேலி செய்தார். இதேபோல், அரை சதத்தை எட்டிய போது பாகிஸ்தான் வீரர் ஃபர்ஹான் பேட்டை துப்பாக்கி போன்று பிடித்து, கன் ஷாட் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இருவருக்கும் எதிராக ஐசிசியில் பிசிசிஐ தரப்பில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, பாகிஸ்தான் அளித்த புகாரில் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மீது ஐசிசி விசாரணை நடக்கவிருப்பது உறுதியாகியுள்ளது.


