இதற்கிடையே, இறுதிப்போட்டிக்குள் நுழையும் முன்னதாகவே இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கு பாகிஸ்தான் பௌலர் சவால் விடுத்துள்ளார். குரூப் 4-ல் பாகிஸ்தானை வென்ற பிறகு பேசிய இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், ‘பாகிஸ்தான் அணி இந்திய அணிக்கான எதிரி அணி என குறிப்பிட வேண்டாம்’ என கேலி செய்தார். அதாவது, இரு அணிகளும் சமமான வெற்றிகளை பெற்றிருந்தால் அப்படி குறிப்பிடலாம் என்றும், ஆனால், இந்திய அணி பாகிஸ்தானை 10 முறைக்கு மேல் தோற்கடித்துள்ளதாகவும் அதற்கு விளக்கமாக சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார்.


