Last Updated:
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்ற நிலையில், கோப்பையை பெறாதது குறித்து சூர்யகுமார் விளக்கம் அளித்துள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்ற நிலையில், கோப்பையை பெறாதது குறித்து சூர்யகுமார் விளக்கம் அளித்துள்ளார்.
ஆசிய கோப்பை இறுதி போட்டியில் வெற்றிப்பெற்ற பின்கோப்பையை பெற காத்திருந்ததாகவும், ஆனால் அதனை மோஷின் நக்வி எடுத்துக்கொண்டு ஓடிவிட்டதாகவும் இந்திய டி20 அணி கேப்டன் சூர்யகுமார் குற்றம்சாட்டி உள்ளார்.
இந்தியா திரும்பிய சூர்யகுமார், கோப்பை விவகாரம் தொடர்பாக ஆங்கில பத்திரிகைக்கு பேட்டியளித்தார். அதில், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக உள்ள பாகிஸ்தான் அமைச்சர் மோஷின் நக்வியிடம் இருந்து கோப்பையை பெற வேண்டாம் என்பது இந்திய அணி வீரர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எடுத்த முடிவு என்றார்.
பரிசு வழங்கும் நிகழ்ச்சிக்கு இந்திய அணியினர் அனைவரும் சரியான நேரத்திற்கு வந்துவிட்டனர், யாரையும் காக்கவைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார். மேலும், சாம்பியன் அணிக்கு கோப்பை மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த சூர்யகுமார் யாதவ்,
தாம் கிரிக்கெட் விளையாட தொடங்கியதில் இருந்து இதுபோன்ற ஒரு நிகழ்வை பார்த்ததில்லை என குறிப்பிட்டார். குறைந்த இடைவெளியில் இரு போட்டிகளில் விளையாடி, கடினமாக போட்டியிட்டே இந்திய அணி வெற்றிப்பெற்றது என குறிப்பிட்ட சூர்யா குமார், அந்த கோப்பைக்கு இந்திய அணி தகுதியானது என்றார். மேலும் மக்களின் மனதை வெல்வது தான் நிஜ வெற்றி என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
September 30, 2025 9:56 PM IST


