Last Updated:
தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணியும், ஆறுதல் வெற்றிபெறும் முனைப்பில் நியூசிலாந்து அணியும் களமிறங்க உள்ளன
நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் வருண் சக்கரவர்த்தி மீண்டும் இந்திய அணியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நியூசிலாந்துக்கு எதிரான 4ஆவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறும் நிலையில், தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி களமிறங்க உள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, ஒரு நாள் தொடரை கைப்பற்றிய நிலையில், 5 போட்டிகளைக் கொண்ட 20 ஓவர் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் 3 போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
4ஆவது போட்டி, விசாகப்பட்டினம் மைதானத்தில் இன்றிரவு 7 மணிக்கு தொடங்குகிறது. கேப்டன் சூர்யகுமார் சிறப்பாக செயல்படுவது இந்திய அணிக்கு வலுவாக உள்ளது. திலக் வர்மாவுக்கு ஏற்பட்ட காயத்தால் அணியில் சேர்க்கப்பட்ட இஷான் கிஷன், சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இன்றைய போட்டியில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்படுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷனும், அபிஷேக் சர்மாவும் களமிறங்குவார்கள் சுழற்சி கொள்கையின் அடிப்படையில், ஜஸ்பிரித் பும்ரா, ரவி பிஸ்னோய் ஆகியோருக்குப் பதிலாக அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் சேர்க்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நியூசிலாந்தைப் பொறுத்தவரை, ஜேம்ஸ் நீஷம், லாக்கி ஃபெர்குஷன் ஆகியோர் அணிக்கு திரும்புகின்றனர். பேட்டிங்குக்கு சாதகமான இந்த மைதானத்தில் தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணியும், ஆறுதல் வெற்றிபெறும் முனைப்பில் நியூசிலாந்து அணியும் களமிறங்க உள்ளன.
உத்தேச இந்திய அணி – அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரிங்கு சிங், அக்சர் படேல், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா


