Last Updated:
India Vs New Zealand | இந்தியா-நியூசிலாந்து கடைசி ஒரு நாள் போட்டி இன்று இந்தூரில். இரு அணிகள் சம நிலையில், கோப்பை வெல்லும் யார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான, ஒரு நாள் கிரிக்கெட் தொடரை வெல்லப் போவது யார் என தீர்மானிக்கும் கடைசி போட்டி இந்தூரில் இன்று நடைபெறுகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, மூன்று போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சம நிலையில் உள்ளன.
இந்நிலையில், இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி மத்தியபிரதேசம் மாநிலம் இந்தூரில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்க உள்ளது. இரு அணிகளும் சம பலத்துடன் இருப்பதால், வெற்றியுடன் கோப்பையை வெல்ல போவது யார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்திய அணியை பொறுத்த வரை ரோகித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ், கே.எல்.ராகுல் ஆகியோர் நல்ல பார்மில் இருக்கும் நிலையில், பிரசித் கிருஷ்ணாவிற்கு பதிலாக அர்ஷ்தீப் சிங், நிதிஷ்குமார் ரெட்டிக்கு பதிலாக ஆயுஷ் பதோனி இன்று களமிறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நியூசிலாந்து அணி இந்திய மண்ணில் இதுவரை ஒருநாள் தொடரை வென்றதில்லை. 2024-ஆம் ஆண்டு டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்தது போல் இந்த முறை ஒரு நாள் போட்டித் தொடரை முதல்முறையாக வென்று சாதிக்கும் முனைப்பில் களமிறங்க உள்ளது.
Indore,Madhya Pradesh


