எனினும், இப்படியான சவால்கள் இருந்தாலும், தனது அணியின் தன்னம்பிக்கை குறையவில்லை என்று எராஸ்மஸ் தெரிவித்தார். அமெரிக்கா போன்ற சிறிய அணிகளின் சமீபத்திய வெற்றிகளை முன்னுதாரணமாகக் கொண்டு, நமீபியா தனது முழு பலத்துடன் போராடும் என்று அவர் கூறினார். அதில், “நாங்கள் மைதானத்திற்குச் சென்று எங்களுக்கே உரிய பாணியில் போராடுவோம். எதிரணி வலிமையானது என்றோ, மைதானத்தில் இருக்கும் கூட்டத்தைப் பார்த்தோ நாங்கள் பயப்பட மாட்டோம். தற்போதைய தருணத்தில் கவனம் செலுத்தி விளையாடினால் வெற்றி நிச்சயம்.” என எராஸ்மஸ் நம்பிக்கை தெரிவித்தார்.


