டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு நியூசிலாந்து தகுதி பெற்றுவிட்ட நிலையில், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியாவும், இங்கிலாந்தும் இன்று மோதுகின்றன.
இதுவரை இருமுறை டி20 உலகக் கோப்பையை வென்றுள்ள அணிகள் எனப் பெருமை பெற்றுள்ள இரு ஹெவி வெயிட்களான இந்தியாவும், இங்கிலாந்தும் மோதுவதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
2022ல் அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்தை 2024-ல் அரையிறுதியில் தோற்கடித்து இந்தியா பழிதீர்த்தது. இத்தகைய பின்னணியுடன் இரு அணிகளும் இன்று இரவு 7 மணி அளவில் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகின்றன.

