Last Updated:
தற்போதைய சூழலில் இந்திய அணி வலுவாக இருப்பதால் இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைவதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளன.
இங்கிலாந்து மண்ணில் இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர்கள் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மற்றும் சுனில் கவாஸ்கர் ஆகியோர் ஏற்படுத்திய 39 ஆண்டுகால சாதனையை நேற்று கே.எல். ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் முறியடித்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று முதல் போட்டி லீட்ஸில் தொடங்கியது. இதில் டாஸ் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் பௌலிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து தொடக்க வீரர்களாக களமிறங்கிய இந்திய அணியின் கே.எல். ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் சேர்த்தனர். கே எல் ராகுல் 78 பந்துகள் எதிர்கொண்டு 8 பவுண்டரியுடன் 42 ரன்கள் எடுத்தார்.
இருவரும் முதல் விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்தனர். 39 ஆண்டுகளுக்கு முன்பு இதே லீட்ஸ் மைதானத்தில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மற்றும் சுனில் கவாஸ்கர் ஆகியோர் தொடக்க விக்கெட்டுக்கு 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது தான் இதுவரை ரெக்கார்டாகக இருந்து வந்தது.
அதனை 39 ஆண்டுகளுக்குப் பின்னர் கே எல் ராகுல் எஸ் எஸ் வி ஜெய்ஸ்வாலும் முறியடித்துள்ளார்கள் நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் எடுத்திருந்தது. ரிஷப் பந்த் 65 ரன்களும் கேப்டன் சுப்மன் கில் 127 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.
நேற்று தொடக்க வீரராக களமிறங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 101 ரன்கள் எடுத்து பாராட்டுகளை பெற்றுள்ளார். தற்போதைய சூழலில் இந்திய அணி வலுவாக இருப்பதால் இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைவதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளன. அடுத்தடுத்த நாட்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் போது இந்திய அணி வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் நிபுணர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இன்றைய 2 ஆம் நாள் ஆட்டத்தின்போது ரிஷப் பந்த் 134 ரன்களும், சுப்மன் கில் 147 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 450 ரன்களை கடந்து விளையாடி வருகிறது.
June 21, 2025 5:50 PM IST


