Last Updated:
முழு நேர சுழற்பந்து வீச்சாளர், ஆல்ரவுண்டர் சுழற்பந்து வீச்சாளர்கள் என மூவரில் யார் அந்த இருவர் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை
இங்கிலாந்துக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 2 ஸ்பின்னர்களுடன் விளையாட இந்தியா திட்டமிட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்தியா தோல்வியடைந்த நிலையில், பெர்மிங்ஹாமின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நாளை இரண்டாவது போட்டி தொடங்க உள்ளது.
இதில் விளையாடும் இங்கிலாந்து அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. அதில் முதல் போட்டியில் விளையாடிய அதே 11 வீரர்கள் 2ஆவது போட்டியிலும் களம் காண்பார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் ரயான் டென் டிஷாட்ஸ் (Ryan ten Doeschate)செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 2 ஸ்பின்னர்களை 2ஆவது போட்டியில் இந்திய அணி களமிறக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறினார்.
முழு நேர சுழற்பந்து வீச்சாளர், ஆல்ரவுண்டர் சுழற்பந்து வீச்சாளர்கள் என மூவரில் யார் அந்த இருவர் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்றார்.
அத்துடன் முழு உடல்தகுதியுடன் விளையாடுவதற்கு தயாராக பும்ரா இருப்பதாகவும் கூறிய அவர், 2ஆவது போட்டியில் பும்ரா விளையாடுவாரா என்பதை உறுதி செய்யவில்லை.
July 01, 2025 6:32 PM IST