• Login
Thursday, July 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IND vs ENG 2nd ODI : இந்திய பேட்ஸ்மேன்கள் சுமாரான ஆட்டம்.. இங்கிலாந்து வெற்றி பெற 234 ரன்கள் இலக்கு | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
July 16, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
IND vs ENG 2nd ODI : இந்திய பேட்ஸ்மேன்கள் சுமாரான ஆட்டம்.. இங்கிலாந்து வெற்றி பெற 234 ரன்கள் இலக்கு | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 16, 2026 9:19 PM IST

ஜஸ்பிரித் பும்ரா அதிரடியாக விளையாடி 13 பந்துகளில் 20 ரன்கள் (3 பவுண்டரிகள், 1 சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழக்காமல் ஓரளவு ரன் எண்ணிக்கையை உயர்த்த உதவினார்

ஷ்ரேயாஸ் ஐயர் - விராட் கோலி
ஷ்ரேயாஸ் ஐயர் – விராட் கோலி

இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.

முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் 2 ஆவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்துள்ள இந்திய அணி 44 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 233 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. இதையடுத்து 234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடி வருகின்றனர்.

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் சுப்மன் கில் மற்றும் ரோஹித் சர்மா களம் இறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 44 ரன்கள் சேர்த்த நிலையில், சுப்மன் கில் 31 ரன்களில் அட்கின்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ரோஹித் சர்மாவும் 26 ரன்களுக்கு வில் ஜாக்ஸ் பந்துவீச்சில் வெளியேறினார்.

அதன் பின்னர் ஜோடி சேர்ந்த நட்சத்திர வீரர் விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் வீழ்ச்சியைத் தடுத்தனர். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக விளையாடிய விராட் கோலி 66 பந்துகளில் 65 ரன்கள் (8 பவுண்டரிகள்) எடுத்து ஜோஃப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் தூணாக நின்று விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 71 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 66 ரன்கள் குவித்து அசத்தினார்.

இடையில் வந்த இஷான் கிஷன் (1 ரன்), வாஷிங்டன் சுந்தர் (2 ரன்கள்), அக்சர் படேல் (1 ரன்), ஷிவம் துபே (0) ஆகியோர் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இதனால் இந்திய அணி 193 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில், ஜஸ்பிரித் பும்ரா அதிரடியாக விளையாடி 13 பந்துகளில் 20 ரன்கள் (3 பவுண்டரிகள், 1 சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழக்காமல் ஓரளவு ரன் எண்ணிக்கையை உயர்த்த உதவினார். இறுதியாக இந்தியா 44 ஓவர்களில் 233 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் இந்திய அணியை வெகுவாகக் கட்டுப்படுத்தினர். குறிப்பாக ஜோஃப்ரா ஆர்ச்சர் 10 ஓவர்கள் வீசி 47 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவரைப் போலவே கஸ் அட்கின்சன் 9 ஓவர்களில் 50 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும், சாகிப் மஹ்மூத் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இந்திய அணியின் ரன் வேகத்தை முடக்கினர்.

Read More

Previous Post

“நீட்; சோனம் வாங்சுக்கு திமுக ஆதரவு…” – எம்.பி. ஆ.ராசா | India News (இந்தியா செய்திகள்)

Next Post

Gold Price Drop | மீண்டும் தலைகீழாக சரிந்தது தங்கம் விலை.. நகை பிரியர்களுக்கு ஜாக்பாட்.. இன்றைய நிலவரம் என்ன?

Next Post
Gold Price Drop | மீண்டும் தலைகீழாக சரிந்தது தங்கம் விலை.. நகை பிரியர்களுக்கு ஜாக்பாட்.. இன்றைய நிலவரம் என்ன?

Gold Price Drop | மீண்டும் தலைகீழாக சரிந்தது தங்கம் விலை.. நகை பிரியர்களுக்கு ஜாக்பாட்.. இன்றைய நிலவரம் என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin