Last Updated:
388 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கி அணிக்கு வலு சேர்த்தனர்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் தோல்வி அடைந்த இந்தியா, தொடரை பறிகொடுத்தது. இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய ‘ஹிட்மேன்’ ரோகித் சர்மாக சதமடித்து கம்பேக் கொடுத்துள்ளார்.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை விளையாடியது. முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்ற நிலையில், தொடர் 1க்கு 1 என சமநிலையில் இருந்தது. இதனால் கடைசி போட்டியில் வென்று தொடரை கைப்பற்றப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
அதன்படி, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 3ஆவது போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து அணி, 50 ஓவர்கள் முடிவில் 387 ரன்கள் குவித்திருந்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க வீரர்களான பென் டக்கெட் 141 ரன்களும், ஜேக்கப் பெத்தேல் 91 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர், ஜோ ரூட் பொறுப்புடன் விளையாடி அரைசதம் கடந்தார்.
388 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கி அணிக்கு வலு சேர்த்தனர். சுப்மன் கில் 77 ரன்களிலும், ரோகித் சர்மா சதம் கடந்து 138 ரன்களிலும் அவுட்டான நிலையில், அடுத்தடுத்து வந்தவர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறினர்.
மறுமுனையில் அதிரடியாக ஆடிய விராட் கோலி 74 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 360 ரன்கள் மட்டுமே எடுத்த இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்தது.


