Last Updated:
மீதம் ஒரே ஒரு போட்டி மட்டுமே உள்ள நிலையில், இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடர் தோல்வியை தவிர்க்க முடியும்.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இவற்றில் 4 போட்டிகள் முடிந்துள்ளன.
இதில் இங்கிலாந்து அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று 2-1 ஒன்று என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது. நான்காவது போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி டிரா செய்துள்ளது. மீதம் ஒரே ஒரு போட்டி மட்டுமே உள்ள நிலையில், இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடர் தோல்வியை தவிர்க்க முடியும்.
டிராவில் போட்டி முடிந்தால் இங்கிலாந்து அணி தொடரை வென்றுவிடும். இதற்கிடையே இந்திய அணியில் விராட் கோலி, ரோஹித் சர்மா இல்லாதது குறித்து விமர்சனங்கள் எழுந்தன. பயிற்சியாளர் கௌதம் கம்பீர் இந்த இரு நட்சத்திர வீரர்களையும் ஓய்வு பெற கட்டாயப்படுத்தியதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், முன்னாள் வீரரும் பிரபல வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கரிடம் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இல்லாதது அணிக்கு இழப்பை ஏற்படுத்தியதா என்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் கூறியதாவது-
ரோகித் சர்மா கடந்த 2 டெஸ்ட் தொடரில் விளையாடி 10 ரன்கள் சராசரி வைத்திருக்கிறார். இதேபோன்று விராட் கோலி கடந்த 5 ஆண்டுகளில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 30 ரன்கள் சராசரி வைத்துள்ளார். இந்த இரு வீரர்களுக்கு மாற்று வீரர்கள் யாரும் கிடையாது என்பதில் சந்தேகம் இல்லை.
இருப்பினும் அவர்கள் அணியில் இல்லாதது பெரிய இழப்பை ஏற்படுத்தவில்லை என்று கருதுகிறேன். மிக மூத்த வீரர்கள் அணியில் இல்லை. ஆனாலும் மற்ற வீரர்கள் அளித்த ரன் பங்களிப்பு நன்றாகவே உள்ளது. ஏனென்றால் இரு சீனியர் வீரர்களின் ரன் பங்களிப்பு அதிகம் என்று கூறிவிட முடியாது என கூறியுள்ளார்.
July 29, 2025 5:13 PM IST