• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IND vs ENG : ரிஷப் பந்துக்கு அஸ்வின் கொடுத்த எச்சரிக்கை.. இந்திய அணி ரசிகர்கள் வரவேற்பு

GenevaTimes by GenevaTimes
June 26, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
IND vs ENG : ரிஷப் பந்துக்கு அஸ்வின் கொடுத்த எச்சரிக்கை.. இந்திய அணி ரசிகர்கள் வரவேற்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 26, 2025 6:28 PM IST

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மிகவும் சுமாராக விளையாடி ஏமாற்றத்தைக் கொடுத்த பந்த், 2 சதங்கள் மூலம் அதிரடியாக கம்பேக் கொடுத்துள்ளார்.

ரிஷப் பந்த்ரிஷப் பந்த்
ரிஷப் பந்த்

இந்தியா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ரிஷப் பந்துக்கு முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் எச்சரிக்கை ஒன்றைக் கொடுத்துள்ளார். இதனை அவர் ஏற்று நடப்பாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

வெற்றி பெற வேண்டிய இந்த மேட்சில் இந்திய அணி ஃபீல்டிங்கில் கடுமையாக சொதப்பியதால் ஆட்டம் கையை விட்டுச் சென்றது. குறிப்பாக இந்திய அணியின் சில வீரர்கள் முக்கியமான கேட்ச்களைப் பிடிக்கத் தவறினர். முதல் 4 நாட்கள் அற்புதமான ஆட்டத்தை இந்திய அணி வெளிப்படுத்திய நிலையில் கடைசி நாளில் இந்திய அணி வீரர்கள் மோசமாக விளையாடி தோல்வியடைந்தனர்.

ஆறுதல் அளிக்கும் வகையில் இந்தப் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் இந்திய அணியின் ரிஷப் பந்த் சதம் அடித்திருப்பது பாராட்டுகளைப் பெற்றுள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மிகவும் சுமாராக விளையாடி ஏமாற்றத்தைக் கொடுத்த பந்த், 2 சதங்கள் மூலம் அதிரடியாக கம்பேக் கொடுத்துள்ளார்.

முதல் இன்னிங்ஸில் அவர் சதம் அடித்தபோது பல்டி அடித்து அதனைக் கொண்டாடினார். இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்த போதும் அவர் பல்டி அடிக்க வேண்டும் என முன்னாள் வீரரும் விமர்சகருமான சுனில் கவாஸ்கர் கேட்டுக்கொண்டார். ஆனால் அடுத்த மேட்சில் செய்வார் என ரிஷப் பந்த் சிக்னல் கொடுத்தார்.

இந்நிலையில் ரிஷப் பந்த்திற்கு முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் வார்னிங் ஒன்றைக் கொடுத்துள்ளார். அதாவது ரிஷப் பந்த் பல்டி அடிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இது டி20 போட்டிகள் அல்ல, இது டெஸ்ட் மேட்ச். ஐபிஎல் தொடரில் நாம் அதிகபட்சம் 60 பந்துகளுக்கு மேல் பேட்டிங் செய்ய மாட்டோம்.

ஆனால் டெஸ்ட் போட்டி அப்படி அல்ல. நாளொன்றுக்கு ஒரு பேட்ஸ்மேன் 200 பந்துகளுக்கு மேல் பேட்டிங் செய்ய முடியும். அணியின் முக்கிய வீரராக இருக்கும் ரிஷப் பந்த் பல்டி அடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

தனது ஃபிட்னஸை வெளிப்படுத்த ரிஷப் பந்த் பல்டி அடிக்கிறார். அதற்கு அவசியம் இல்லை என்று கூறியுள்ளார் அஸ்வின். இந்த எச்சரிக்கையை ஏற்று ரிஷப் பந்த் பல்டி அடிப்பதைத் தவிர்ப்பாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

June 26, 2025 6:28 PM IST

Read More

Previous Post

தேர்தலில் போட்டியிடாத 345 கட்சிகளை பட்டியலில் இருந்து நீக்கும் தேர்தல் ஆணையம் | 345 political parties that did not contest elections Election Commission removes them from the list

Next Post

ஆதித்யா பிர்லா பர்சனல் லோன்: வட்டி விகிதம், விண்ணப்ப செயல்முறை… முழு விவரம்…!

Next Post
ஆதித்யா பிர்லா பர்சனல் லோன்: வட்டி விகிதம், விண்ணப்ப செயல்முறை… முழு விவரம்…!

ஆதித்யா பிர்லா பர்சனல் லோன்: வட்டி விகிதம், விண்ணப்ப செயல்முறை... முழு விவரம்...!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin