Last Updated:
96 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த இந்திய அணி 364 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கே.எல். ராகுல் 137 ரன்கள் எடுத்தார்
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் அந்நாட்டு அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெறுவதற்கு இந்திய அணி 371 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது லண்டன் லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 471 ரன்கள் குவித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணி 465 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது.
அதனால் 6 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி விளையாடி வருகிறது. இதில் இந்திய அணியின் தொடக்க வீரர் கே.எல். ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்தார்.
கேப்டன் சுப்மன் கில் 8 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார். சாய் சுதர்சன் 30 ரன்களும், ஜெய்ஸ்வால் 4 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். முதல் இன்னிங்சில் 134 ரன்கள் எடுத்த விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், இரண்டாவது இன்னிங்ஸில் 118 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
96 ஓவர்கள் வரை தாக்குப்பிடித்த இந்திய அணி 364 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கே.எல். ராகுல் 137 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இந்திய அணி 2 ஆவது இன்னிங்ஸில் 370 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இதையடுத்து 371 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடி வருகின்றனர்.
June 23, 2025 10:46 PM IST


