Last Updated:
நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 1 விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் எடுத்திருந்தது
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 5ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 4 ஆவது நாளான இன்று தொடக்கத்திலேயே இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை பறிகொடுத்து.
தற்போது 3 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி தடுமாறி வரும் நிலையில், இந்திய அணி வெற்றி பெறுவதற்கு இன்னும் 7 விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்படுவதால் இந்திய அணியின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது. இதை அடுத்து பேட்டிங்கை தொடர்ந்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 224 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 247 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணியில் தொடக்க வீரர் யசஸ்வி ஜெய்ஸ்வால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 118 ரன்கள் குவித்தார். ஆகாஷ் தீப் 66 ரன்களும், ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா 53 ரன்களும் சேர்த்தனர். இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 396 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.
இதையடுத்து இங்கிலாந்து அணி 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களம் இறங்கியது. நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 1 விக்கெட் இழப்புக்கு 50 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில் அந்த அணியின் பென் டக்கெட் 54 ரன்களும், ஆலி போப் 27 ரன்களும் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தனர். டக்கெட் விக்கெட்டை பிரசித் கிருஷ்ணாவும், போப் விக்கெட்டை சிராஜும் கைப்பற்றினர்.
August 03, 2025 4:58 PM IST


