Last Updated:
ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு இவ்வளவு வரவேற்பு இருக்குமா!! என நிபுணர்கள் இந்த ரெக்கார்டை வியந்து பாராட்டுகிறார்கள்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜியோ ஹாட்ஸ்டார் ஆப் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
டெஸ்ட் போட்டிகளை பொறுத்த அளவில் மிக அதிகமான பார்வையாளர்களைப் பெற்று இந்த இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சாதனை படைத்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.
லீட்ஸ் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்ஹாம் நகரில் நாளை தொடங்க உள்ளது.
இதனையொட்டி தீவிர பயிற்சியில் இந்திய அணி வீரர்கள் ஈடுபட்டனர். இந்நிலையில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை டிஜிட்டல் தளங்களில் 8 கோடியே 91 லட்சம் பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளார்கள். மொத்தம் இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டி 1370 கோடி நிமிடங்கள் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளதாக ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு இவ்வளவு வரவேற்பு இருக்குமா!! என நிபுணர்கள் இந்த ரெக்கார்டை வியந்து பாராட்டுகிறார்கள். முன் எப்போதும் இல்லாத வகையில் ஜியோ ஹாட்ஸ்டார் இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியினை ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வர்ணனை செய்தது.
குறிப்பாக தமிழ் வர்ணனை மூலம் ரசிகர்கள் கிரிக்கெட்டின் ஏராளமான நுணுக்கங்களை அறிந்து கொண்டார்கள். இந்த நிலையில் நாளை இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ளது.
July 01, 2025 7:04 PM IST